குளிர் செயல் முறை சோப்பு (Cold process soap)

 குளிர் செயல் முறை சோப்பு

Cold process soap (CP) 

மிகவும் எளிய முறையில் தேங்காய் எண்ணெய் சோப்பு எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்

1.தேங்காய் எண்ணெய் 900 மில்லி. வெண்ணெய் 100 கிராம்.

2.காஸ்டிக் சோடா 250 கிராம்

3.Distillery water. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 350 மில்லி

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

எச்சரிக்கை (Caution) 

பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து வேலையை தொடங்கவும். 

கையுறை,பாதுகாப்புக் கண்ணாடி,வாயுறை

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

350 மில்லி தண்ணீரை ஒரு கலக்கும் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் 250 கிராம் காஸ்டிக் சோடாவை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு பிளாஸ்டிக் கரண்டியால் கலக்கிக் கொண்டே சேர்க்கவும். காஸ்டிக் சோடா நன்கு கரைந்த பின் அந்த கலவை நன்கு சூடாக இருக்கும். சூடு நன்கு ஆறி....அறை வெப்பநிலைக்குச் திரும்ப 5அல்லது 6 மணி நேரம் ஆகும். அதுவரை பாதுகாப்பாக ஓரமாக வைக்கவும். 


காஸ்டிக் சோடா வும் தண்ணீரும் சேர்ந்த கலவையே லை (LYE) எனப்படும். 

ஆறிய லை கலவையை தேங்காய் எண்ணெயில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு வெண்ணெயை யும் சேர்த்து கலக்கவும். கலவை தோசை மாவு பதத்திற்கு வந்த பின்பு பேப்பர் கப் அல்லத சோப்பு மோல்டுகள் இருந்தால் ஊற்றி வைக்கவும். அடுத்தநாள் வெளியில் எடுத்து 6 வாரங்கள் கழித்து உபயோகிக்கவும். 

வெறும் தேங்காய் எண்ணெயில் சோப்பு செய்து உபயோகிக்கும் பொழுது தோல் வறட்சியடையலாம். அதனால் வெண்ணெய் சேர்க்கப்பட்டுள்ளது. வேறு எண்ணெய் களையும் இதே விகிதத்தில் எடுத்துக் கொள்ளலாம். 

வேண்டுமென்றால் விரும்பிய வண்ணங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

குறிப்பு:

நீரில் காஸ்டிக் சோடாவை சிறிது சிறிதாகக் கலக்க வேண்டும் காஸ்டிக் சோடாவில் நீரை கலக்கக் கூடாது.



குளியல் சோப்புகள்.

சோப்பு பல வகையாகத் தயாரிக்கப்  படுகிறது. முக்கியமான மூன்று முறைகளை இப்போது பார்ப்போம். 

1 குளிர் செயல் முறை. (Cold process. (CP)) 

இது  காஸ்டிக் சோடா வுடன் எண்ணெய் களைக் கலந்து செய்வது.இதை உபயோகப் படுத்த செய்த நாளிலிருந்து ஆறு வாரங்கள் ஆகும். இதை மிக பாதுகாப்பான ஏற்பாடு களுடன் கவனமாகக் கையாள வேண்டும். ஏனெனில் காஸ்டிக் சோடா அரிக்கும் தன்மை கொண்டது. 
கைகளுக்கு கையுறை, 
கண்களுக்கு காகிள் எனப்படும் கண்ணாடி, முகத்தை மறைக்கும் மாஸ்க், கால்களில் ஷூ, 
காட்டன் துணிகள் அணிந்து தான்
இதைச் செய்ய வேண்டும். காஸ்டிக் சோடா தண்ணீரில் கரைக்கும் போது அபரிமிதமான வெப்பத்தை ஏற்படுத்தும் கிட்டத்தட்ட 200 டிகிரி சென்டிகிரேட் வரை. அதனால் பல உடல் உபாதைகள், சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். 


2சூடான செயல் முறை. (Hot process(HP)) 

இது காஸ்டிக் சோடாவையும் எண்ணெய் களையும் சூடு செய்து விரைவில் சோப்பாக மாற்றுவது. இது செய்த நாளில் இருந்து 24 மணி நேரத்தில் உபயோகப் படுத்தலாம். இதுவும் முதல் முறையைப் போலவே பாதுகாப்பாகக் கையாள வேண்டும்

3உருக்கி செய்யும் முறை. (Melt and pour(MP)). 

இம்முறையில் தயாரித்த சோப்பை உடனே உபயோகிக்கலாம். இது ஏற்கனவே(.Soapbase)அடிப்படை சோப்பாக இருப்பதால் இதை தயாரிப்பதில். ஆபத்துகள் இல்லை என்றே சொல்லலாம். 

இன்னும் பலவகை சோப்பு தயாரிக்கும் முறைகள் இருக்கின்றன. 


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


குளிர்செயல் முறை சோப்பு. 
Cold process soap (CP) 

இப்போது குளிர்வித்தல் முறை சோப் எப்படி தயாரிப்பது என்ன செயல்முறையைப் பார்ப்போம். 


சார்க்கோல் சோப்(Charcol soap)

கரிப்பொடியில் குளிர் செயல்முறை சோப்பை எப்படி தயாரிப்பது உங்கள் விருப்படி நீங்களே சார்க்கோல் சோப்பை தயாரிப்பது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் ...