குளியல் சோப்புகள்.

சோப்பு பல வகையாகத் தயாரிக்கப்  படுகிறது. முக்கியமான மூன்று முறைகளை இப்போது பார்ப்போம். 

1 குளிர் செயல் முறை. (Cold process. (CP)) 

இது  காஸ்டிக் சோடா வுடன் எண்ணெய் களைக் கலந்து செய்வது.இதை உபயோகப் படுத்த செய்த நாளிலிருந்து ஆறு வாரங்கள் ஆகும். இதை மிக பாதுகாப்பான ஏற்பாடு களுடன் கவனமாகக் கையாள வேண்டும். ஏனெனில் காஸ்டிக் சோடா அரிக்கும் தன்மை கொண்டது. 
கைகளுக்கு கையுறை, 
கண்களுக்கு காகிள் எனப்படும் கண்ணாடி, முகத்தை மறைக்கும் மாஸ்க், கால்களில் ஷூ, 
காட்டன் துணிகள் அணிந்து தான்
இதைச் செய்ய வேண்டும். காஸ்டிக் சோடா தண்ணீரில் கரைக்கும் போது அபரிமிதமான வெப்பத்தை ஏற்படுத்தும் கிட்டத்தட்ட 200 டிகிரி சென்டிகிரேட் வரை. அதனால் பல உடல் உபாதைகள், சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். 


2சூடான செயல் முறை. (Hot process(HP)) 

இது காஸ்டிக் சோடாவையும் எண்ணெய் களையும் சூடு செய்து விரைவில் சோப்பாக மாற்றுவது. இது செய்த நாளில் இருந்து 24 மணி நேரத்தில் உபயோகப் படுத்தலாம். இதுவும் முதல் முறையைப் போலவே பாதுகாப்பாகக் கையாள வேண்டும்

3உருக்கி செய்யும் முறை. (Melt and pour(MP)). 

இம்முறையில் தயாரித்த சோப்பை உடனே உபயோகிக்கலாம். இது ஏற்கனவே(.Soapbase)அடிப்படை சோப்பாக இருப்பதால் இதை தயாரிப்பதில். ஆபத்துகள் இல்லை என்றே சொல்லலாம். 

இன்னும் பலவகை சோப்பு தயாரிக்கும் முறைகள் இருக்கின்றன. 


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


குளிர்செயல் முறை சோப்பு. 
Cold process soap (CP) 

இப்போது குளிர்வித்தல் முறை சோப் எப்படி தயாரிப்பது என்ன செயல்முறையைப் பார்ப்போம். 


1 கருத்து:

சார்க்கோல் சோப்(Charcol soap)

கரிப்பொடியில் குளிர் செயல்முறை சோப்பை எப்படி தயாரிப்பது உங்கள் விருப்படி நீங்களே சார்க்கோல் சோப்பை தயாரிப்பது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் ...