கற்றாழை அரிசிமாவு சோப்(alovera rice flour soap)

 

கற்றாழை அரிசிமாவு சோப்(alovera rice flour soap)

சோப் பேஸ்   - 500 கிராம்

அரிசி மாவு   - 50 கிராம்

கற்றாழை ஜெல் - 50கிராம்

ரோஸ்மேரி எசன்ஸியல் ஆயில் - 15 ்சொட்டுகள்

ரோஸ்மேரி வாசனை எசன்ஸ் -10 சொட்டுகள்

விட்டமின் ஈ ஆயில் 10 சொட்டுகள்

கிளிசரின் 10 மில்லி

தேங்காய் எண்ணெய் 10 மில்லி

தரமான சோப் பேஸ் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். விலை குறைந்த பேஸ்கள் சோப் தயாரிக்க சூடாக்கும் போது கண் எரிச்சல் ,உதடுகள் எரிச்சல் ,தொண்டை எரிச்சல் முதலியவற்றை ஏற்படுத்தும். 

செய்முறை:

(தரமற்ற விலை குறைவான சோப் பேஸூகள் சோப் தயாரிக்கும் போது கண்கள் எரிச்சலாகும். உதடுகள் , தொண்டை எரிச்சல் உண்டாகும்) 

தேங்காய் எண்ணெய்,விட்டமின் ஈ ஆயில், ரோஸ்மேரி எசன்ஸியல் ஆயில்

 ரோஸ்மேரி வாசனை எண்ணெய் ஆகியவற்றுடன் அரிசி மாவைக் கலக்கி

 வைக்கவும்.


 இரட்டை (double boiler) கலனில் அதாவது கீழிருக்கும் பாத்திரத்தில் தண்ணீர்

 ஊற்றி கொதிக்க வைத்து,அதனுள் மற்றொரு பாத்திரம் வைத்து சோப் பேஸை

 உள்ளிடவும். அடியில் தண்ணீர் கொதித்து சூடேறும்போது உள் பாத்திரமும்

 சூடேறி சோப் பேஸ் உருகும்.நன்கு உருகிய பின் கற்றாழை ஜெல் கலக்கவும்.

நன்கு கலந்தபிறகு அரிசி மாவு கலவையை உள்ளே சேர்க்கவும். பிறகு

 பாத்திரத்தை கீழே இறக்கி வைத்து கிளிசரின் சேர்க்கவும்.

சோப் அச்சில் ஊற்றி குளிர வைக்கவும்.கற்றாழை அரிசிமாவு சோப்

 தயார்.இதை மறுநாளே உபயோகிக்கலாம். ஆறியபின் எடுத்து பெட்டிகளில்

 சேமிக்கவும்.

சோப் பேஸை கவனமாகக் கையாளவும். பாதுகாப்புக் கண்ணாடி கண்களுக்கு

 அணியவும்.கைகளுக்கு உறை அணியவும். இந்த சோப் சருமத்தைப்

 பொலிவாக்கும். சிகப்பழகைத் தரும். 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦


Aloe Vera Rice Flour Soap

Ingredients:

Soap base: 500 grams

Rice flour: 50 grams

Aloe vera gel: 50 grams

Rosemary essential oil: 15 drops

Rosemary fragrance essence: 10 drops

Vitamin E oil: 10 drops

Glycerin: 10 ml

Coconut oil: 10 ml

Note: Always purchase and use only high-quality soap bases. Low-cost and low-quality soap bases can cause irritation to the eyes, lips, and throat when heated for soap making.

Method:

Mix rice flour with coconut oil, Vitamin E oil, rosemary essential oil, and rosemary fragrance essence in a bowl. Set aside.

Set up a double boiler by pouring water into the bottom vessel and bringing it to a boil. Place another vessel inside it and add the soap base.

As the water boils and heats up, the inner vessel will also heat up, melting the soap base. Once the soap base has completely melted, add the aloe vera gel and mix well.

After the mixture is well combined, add the rice flour mixture prepared earlier into the soap base. Stir thoroughly.

Remove the vessel from the heat and add glycerin. Mix until everything is well blended.

Pour the soap mixture into molds and allow it to cool. Once cooled, the Aloe Vera Rice Flour Soap is ready. You can use it the next day.

After the soap has set, remove it from the molds and store it in containers.

Precautions:

Handle the soap base carefully.

Wear safety goggles to protect your eyes and gloves for your hands.

This soap helps brighten the skin, adds a natural glow, and enhances your skin’s radiance.

 💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சார்க்கோல் சோப்(Charcol soap)

கரிப்பொடியில் குளிர் செயல்முறை சோப்பை எப்படி தயாரிப்பது உங்கள் விருப்படி நீங்களே சார்க்கோல் சோப்பை தயாரிப்பது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் ...