வேப்பிலை சோப்பு(NEEM SOAP)




வேப்பிலை சோப்பு:

 தோலில் ஏற்படும், தேமல் முகப்பரு, அலர்ஜி போன்ற வற்றை தடுக்கவும் நீக்கவும் பயன்படுகிறது. 
இதை  சோப் பேஸ் வைத்து செய்து பார்க்கலாம். தரமான சோப் பேஸ் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். விலை குறைந்த பேஸ்கள் சோப் தயாரிக்க சூடாக்கும் போது கண் எரிச்சல் ,உதடுகள் எரிச்சல் ,தொண்டை எரிச்சல் முதலியவற்றை ஏற்படுத்தும். 

தேவையான பொருட்கள் :

தரமான சோப் பேஸ் 500 கிராம். 

வேப்பிலை ஒரு கைப்பிடி. 

மஞ்சள் பொடி 2 ஸ்பூன்

ரோஸ்மேரி எசன்சியல் ஆயில்

கிளிசரின் 1 ஸ்பூன்

தேங்காயெண்ணெய் 1 ஸ்பூன்

விட்டமின் ஆயில் 1 ஸ்பூன்

கல் உப்பு 1 ஸ்பூன்



செய்முறை: 

தண்ணீர் விடாமல் வேப்பிலையை நைசாக அரைத்துக்கொள்ளவும்.

தரமான சோப் பேஸ் 500 கிராம்.

 (தரமற்ற விலை குறைவான சோப் பேஸூகள் சோப் தயாரிக்கும் போது கண்கள் எரிச்சலாகும். உதடுகள் , தொண்டை எரிச்சல் உண்டாகும்) 

 இரட்டை (double boiler) கலனில் அதாவது கீழிருக்கும் பாத்திரத்தில் தண்ணீர்

 ஊற்றி கொதிக்க வைத்து,அதனுள் மற்றொரு பாத்திரம் வைத்து சோப் பேஸை

 உள்ளிடவும். அடியில் தண்ணீர் கொதித்து சூடேறும்போது உள் பாத்திரமும்

 சூடேறி சோப் பேஸ் உருகும். உருகியபின் அதில் வேப்பிலை விழுதை போட்டு

 நன்கு கலக்கவும். கட்டிகளில்லாமல் கரைந்தபின் இறக்கி வைத்து , கிளிசரின்,

 ரோஸ்மேரி ஆயில்,தேங்காயெண்ணெய் , விட்டமின் ஈ ஆயில் கல் உப்பு, மஞ்சள் பொடி

 அனைத்தையும் போட்டு நன்கி கலக்கி சோப் அச்சில்  ஊற்றவும்.

நன்கு ஆறிய பின் எடுத்து காற்றோட்டமாக ஒருநாள் வைத்து .பிறகு

 அட்டைப்பெட்டியில் வைக்கவும்.

இந்த சோப் அடுத்த நாளே உபயோகிக்கலாம்.


Neem Soap for Skin Issues: Eczema, Acne, and Allergies

Neem soap can be highly effective in preventing and treating skin issues like eczema, acne, and allergies. This soap can be prepared using a quality soap base. It is crucial to choose a high-grade soap base, as cheaper ones can cause eye irritation, lip irritation, and throat discomfort when heated during the soap-making process.

Ingredients:

  • Quality soap base – 500 grams
  • Neem leaves – A handful
  • Turmeric powder – 2 teaspoons
  • Rosemary essential oil – Few drops
  • Glycerin – 1 teaspoon
  • Coconut oil – 1 teaspoon
  • Vitamin E oil – 1 teaspoon
  • Rock salt – 1 teaspoon

Preparation Method:

  1. Prepare the Neem Paste:Grind the neem leaves into a fine paste without adding water.

  2. Melt the Soap Base:Use a double boiler method: Place water in a lower pan, bring it to a boil, and then place another pan on top containing the soap base.As the heat rises from the boiling water, the soap base will melt evenly.

  3. Mix the Neem Paste:Once the soap base has melted, add the neem paste. Stir well to ensure there are no lumps and the neem is evenly distributed.

  4. Add Other Ingredients:Remove the pan from heat and mix in glycerin, rosemary essential oil, coconut oil, vitamin E oil, rock salt, and turmeric powder. Stir thoroughly.

  5. Pour into Molds:Pour the mixture into soap molds. Let it cool and harden.

  6. Cure the Soap:Once solidified, unmold the soap and let it air-dry for a day in a well-ventilated area.

Your neem soap is now ready to use the next day. Store the soap in a box or wrap it in paper to retain its freshness.

This handmade soap is gentle, natural, and effective in addressing common skin problems while being safe for daily use.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சார்க்கோல் சோப்(Charcol soap)

கரிப்பொடியில் குளிர் செயல்முறை சோப்பை எப்படி தயாரிப்பது உங்கள் விருப்படி நீங்களே சார்க்கோல் சோப்பை தயாரிப்பது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் ...