முகப்பரு மட்டுமல்ல ....தேமல் ,கருந்திட்டுக்கள் போன்ற பிரச்சினைகளையும்
இந்த சோப்பு சரி செய்யும்.உருக்கிச் செய்யும் முறையில் செய்யும் சோப்பு
இது எண்ணெய் வழியும் தோலை புத்துணர்ச்சியுள்ளதாக மாற்றும்.
சோப் பேஸ் தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:
சோப் பேஸ் 450 கிராம்.
வேப்பிலை 25 கிராம்
திருநீற்றுப்பச்சிலை 25 கிராம்
துளசி இலை 25 கிராம்
குப்பைமேனி இலை 25 கிராம்
மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
கல் உப்பு 1 ஸ்பூன்
தரமான தேங்காய் எணணெய் 1 ஸ்பூன்
விட்டமின் ஈ ஆயில் 4 காப்ஸ்யூல்கள்.
செய்முறை:
எடுததுக்கொண்ட இலைகளை தண்ணீரில் நன்கு அலசி வடியவைக்கவும்
பிறகு மஞ்சள் கல் உப்பு சேர்த்து இலைகளை தண்ணீர் விடாமல் அரைத்துக்
கொள்ளவும்.இந்த கலவையை தணியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.அந்த
பாத்திரத்துக்குள் இன்னொரு பாத்திரத்தில் சோப் பேஸை சிறு
துண்டுகளாக்கிப்போட்டு கரண்டியால் கிளறவும். சோப் பேஸ் முழுதாகக்
கரைந்தபின் அரைத்தவிழுதைப் போட்டு ஒன்றாகக் கலக்கும்வரை நன்கு
கிளறவும்.பிறகு தேங்காய் எண்ணெயையும் விட்டமின் ஈ ஆயிலையும்
சேர்த்து 2 நிமிடம் நன்கு கலக்கவும்.அச்சுகளில் ஊற்றவும். முகப்பரு நீக்கும்
சோப்பு தயார். சோப்பு நன்கு உறைந்தபின் அச்சுகளிலிருந்து எடுத்து
உபயோகப்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக