குளிர் செயல் முறை சோப்பு போலவே.ஆனால் சூடாக்க வேண்டும்.
சூடாக்க crock pot அல்லது double boiler முறையில் தயாரிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 24 மணி நேரம் அல்லது அதிக பட்சம் 48 மணி நேரத்தில் உபயோகிக்கலாம்.
எச்சரிக்கை:
காஸ்டிக் சோடாவை கவனமாகக் கையாளவும்.
காற்றோட்டமான இடத்தில் செய்கிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
பாதுகாப்பு உபகரணங்களை உபயோகிக்கவும்.
செய்முறை:
தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் 900 கிராம்
வெண்ணெய் 100 கிராம்
காஸ்டிக் சோடா (lye) 220 கிராம்
தண்ணீர் 300 மில்லி
லை கரைசல் தயாரிக்கவும்.(same as cold process)
தேங்காய் எண்ணெய் ,வெண்ணெய் இவற்றை ஒரு சூடு தாங்கும் பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
எண்ணெய் கலவையில்.. லை கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
ப்ளெண்டர் உபயோகித்து கலக்கினால் விரைவில் கலக்க முடியும்.
தோசை மாவு பதம் வந்ததும் கலவையை க்ராக் பாட் அல்லது டபுள் பாய்லர் முறையில் அடுப்பிலேற்றி சூடேற்றவும்.
100 டிகிரி வெப்பநிலையில் 1 லிருந்து 2 மணி நேரம் கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
வெப்பநிலை ஒரே மாதிரி இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
கலர், மற்றும் வாசனை திரவியத்தையும் சேர்க்கவும்.
மோல்டுகளில் ஊற்றவும்.
பயன்கள்:
விரைவில் உபயோகிகக்கலாம்.
சோப் விரைவில் இறுகும்.(கெட்டியாகும்)
கருத்தில் கொள்ள வேண்டியவை:
அதிக வெப்பத்தினால் ஆபத்தாகலாம்.
நிலையான நிறம் வராமல் போகலாம்.
ஈரப்பதத்திற்காக சில பொருள்களை சேர்க்க வேண்டி வரலாம்.
வாழ்க வளமுடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக