தேவையான பொருட்கள்:
சோப் பேஸ் -450 கிராம்
1/4 கப் கற்றாழை ஜெல்(60)கிராம்
1 டேபிள ் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1 ஸ்பூன் விட்டமின் E ஆயில்
கற்றாழை சாறு 1 ஸ்பூன்
நிறங்கள்(விரும்பியபடி)
வாசனை எசன்ஸ்(விரும்பியபடி)
சோப் பேஸை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.சோப் பேஸ்
துண்டாக்கும்போது அடியில் பேப்பர் விரித்துக் கொள்ளவும்.பின்
டபுள் பாய்லர் முறையில் சோப் பேஸை உருக்கவும்.உருகியபின் கற்றாழை
ஜெல்லை சேர்த்து நன்கு கலக்கவும்.தேங்காய் எண்ணெயும் விட்டமின் ஈ
எண்ணெயும் சேர்க்கு நன்கு கலக்கவும்.கற்றாழை சாறு கலக்கவும்.நிறத்தையும்
வாசனை பொருளையும் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
அச்சுகளில் ஊற்றவும்.
1 மணிநேரத்தில் சோப் தயார்.
கற்றாழை சோப் பயன்கள்:
தோல் எரிச்சலைத் தணிக்கும்.
தோலை ஈரப்பதமாக வைக்கும்.
தோல் அழற்ச்சி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
எச்சரிக்கை:
சூடான சோப்பை கவனமாகக் கையாளவும்.
காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்யவும்.
கண்களுக்கு பாதுகாப்புக் கண்ணாடி(goggles) அணியவும்
கையுறை உபயோகிக்கவும்.
உங்கள் கற்பனைக்குத் தகுந்தாற்போல் பல்வேறு கலவைகளைக் கொண்டு
விதவிதமான சோப்புகளைத்
தயாரிக்கலாம்.
தேனுடன் ஆரஞ்சு சோப்பு
எலுமிச்சை பாலாடை சோப்பு
சிவப்பு சந்தன சோப்பு
சாரக்கோல் சோப்பு
குப்பைமேனி சோப்பு
வெட்டிவேர் சந்தன சோப்பு
இன்னும் பல சோப்புகளைச் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக