அரைக்கீரை மிகுந்த சத்து மிகுந்தது.அரைக்கீரை தினமும் சாப்பிட்டு
வருவதால்உடலில் ரத்தம் பெருகும்.கண்பார்வை சரியாகும்.. ஆண்மை
பெருகும். உடல்வனப்பாகும்.இவ்வளவு நன்மை உள்ள அரைக்கீரையை
கூந்தல் தைலமாகதயார் செய்து உபயோகித்தால் முடி நன்கு
அடர்த்தியாகவும்,கருப்பாகவும்,நீளமாகும் வளரும்.தொடர்ந்து சில மாதங்கள்
உபயோகிப்பதால் முடி பட்டுப்போல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறி
இளநரையைக் குறைந்து நாளடைவில் சரியாகும்.
தேவையான பொருட்கள்:
அரைக்கீரை 1 கட்டு
வேப்பிலை 1 கைப்பிடி
துளசி 1 கைப்பிடி
கீழாநெல்லி 1 கைப்பிடி
ரோஸ்மெரி இலைகள் 1 கைப்பிடி
பெருநெல்லிக்காய் 5
கடுக்காய் 5
அவுரி இலை 1 கைப்பிடி.
விட்டமின் ஈ காப்ஸ்யூல் 4
சுத்தமான தேங்காய் எண்ணெய் 1 லிட்டர்
அதாவது சல்பர் இல்லாத கொப்பரையில்
ஆட்டிய சமையலுக்குகந்த தேங்காய் எண்ணெய் மிக முக்கியமான பொருள்.
செய்முறை:
அரைக்கீரை மற்றும் துளசி ,வேப்பிலைகளைக் கிள்ளி எடுத்துக் கொண்டு
நீரில்அலசி வைக்கவும்..
கீழாநெல்லி வேருடன் நீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
பெரு நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும்.
கடுக்காயை ஒன்றிரண்டாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
அவுரி இலைகளைக் கழுவி வைக்கவும்.
ரோஸ்மேரி இலைகள் பச்சையாகக் கிடைக்காவிட்டால் காய்ந்தது கூட
எடுத்துக் கொள்ளலாம்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்
வாணலியில் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.மிதமாக அடுப்பு எரிய வேண்டும்.
எண்ணெய் புகை வரக் காயக்கூடாது.நன்கு சூடேறியவுடன்
அரைக்கீரை,துளசி,வேப்பிலை மூன்றையும் எண்ணெயில் சேர்க்கவும்.பின்
கீழாநெல்லி சேர்க்கவும்,பின் அவுரி இலை சேர்க்கவும் .அடுத்ததாக
ரோஸ்மெரி இலைகளைச் சேர்க்கவும்.ரோஸ்மேரி முடிவளர்ச்சிக்கும்
பொடுகுத் தொல்லைக்கும் நல்ல தீர்வைக் கொடுக்கும் எண்ணெய்க்கு வேறு
வாசனைப்பொருள் சேர்க்க வேண்டியதில்லை.ரோஸ்மேரி வாசனையே
நன்றாக இருக்கும்.பிறகுபெருநெல்லிக்காய் துருவியதை சேர்க்கவும்.நன்கு
கொதித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒன்றிரண்டாக தட்டிய
கடுக்காயைபோட்டு சடசடப்பு நன்கு அடங்கும்வரை எண்ணெயைக் காய
வைக்கவும்.கீரைகள் பொன்னிறமானவுடன் எண்ணெயை இறக்கி விட்டமின்
ஈ ஆயில் சேர்த்து நன்கு கலக்கவும்.
கூந்தல் தைலம் தயார்.ஆறியபின் கீரைகளை வடித்து காற்றுப்புகாத
பாட்டிலில் எண்ணெயை அடைத்து உபயோகிக்கவும்.தினமும் உபயோகித்து
வர கூந்தலில் நல்ல மாற்றங்கள் தெரியும்.

Good preparation
பதிலளிநீக்கு